என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணம் மீட்பு"
- ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.
மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- வட மாநிலத்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
- ரெயில் மாறி ஏறிவிட்ட பதட்டத்தில் தவறவிட்டார்
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காள மாநிலம் பரணகல் பகுதியைச் சேர்ந்தவர் பிமல் (வயது 52). இவர் ஒசூரில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக, சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் ஓசூர் செல்வதற்கு அவர் தவறுதலாக பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார்.
தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி விட்டார். அவ சரமாக இறங்கியதால் தனது சூட்கேஸ், பையில் வைத்தி ருந்த ரூ.40 ஆயிரம் ஆகிய வற்றை தவற விட்டுவிட்டார்.
இது குறித்து அவர் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை வந்த டைந்ததும் ரெயில் பெட்டி யில் இருந்து சூட்கேஸ், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.
பின்னர் உரியவருக்கு தக வல் தெரிவித்து, அவரை வரவழைத்து சூட்கேஸ் மற் றும் பணத்தை ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 85). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது மனைவியுடன் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமநாதனும், அவரது மனைவியும் துறையூரில் இருந்து பெரம்பலூர் வழியாக விருத்தாச்சலம் செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். மாலை 6.30 மணியளவில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்து நின்ற போது, அதில் இருந்து அவர்கள் இறங்கினர்.
அப்போது ராமநாதன் ரூ.9 ஆயிரத்து 30 இருந்த பணப்பையை பஸ்சிலேயே தவற விட்டு விட்டு இறங்கி விட்டார். இதனால் பதறிப்போன ராமநாதன் பணப்பையை எடுக்க மீண்டும் பஸ்சின் அருகே அவசர, அவசரமாக நடந்து சென்றார். ஆனால் அந்த பஸ் புறப்பட்டு சென்றது. ஆனாலும் ராமநாதன் பஸ்சை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டு விருத்தாச்சலம் நோக்கி சென்று விட்டது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ராமநாதன் திகைத்து நின்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசனிடம் ராமநாதன் நடந்ததை கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் உடனடியாக இதுகுறித்து அந்த தனியார் பஸ்சின் பணிமனைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பஸ் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டார். அந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்று பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சென்னை- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் விமல்குமார், மகேந்திரன், முருகேசன் ஆகியோர் ரோந்து வாகனத்தில் அந்த தனியார் பஸ்சை பின்தொடர்ந்து வேகமாக சென்றனர். ரோந்து வாகனத்தை முருகேசன் ஓட்டினார்.
பின்னர் திருமாந்துறை சுங்கச்சாவடி தாண்டி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி போலீசார் உள்ளே ஏறி சோதனையிட்டனர். அப்போது பஸ்சின் இருக்கையின் கீழ் ராமநாதன் தவற விட்ட பணப்பை கிடந்தது. இதையடுத்து பணப்பையை போலீசார் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் நேற்று அந்த பணப்பையை ராமநாதனிடம் ஒப்படைத்தார். அப்போது ராமநாதன் போலீசாருக்கு கண்ணீர் மல்க இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.மேலும் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பணப்பையை எடுத்து கொடுத்த போலீசாரை வெகுவாக பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்